தாரமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் போதுமான கழிவறை இல்லாததால் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்…

தாரமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் போதுமான கழிவறை இல்லாததால் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்…

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகு தியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2,200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் ஒரே கழிவறை மட்டுமே உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகை யில், இப்பள்ளியில் எங்களது குறைகளைத் தெரிவிக்க பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெறுவதே இல்லை. கழிவ றைகள் பற்றாக்குறையால் எங்கள் குழந்தைகள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதுடன், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி, புதிய கழிவறைகள் மற்றும் முழுமை யான சுற்றுச்சுவர் அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..