பரமக்குடியில் 2,624 மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி,பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 18 பள்ளிகளைச் சார்ந்த 2,624 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அரசின் மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் வழங்கினார்.நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய 3 பள்ளிகளைச் சார்ந்த 95 மாணவர்கள்,, 93 மாணவியர்கள் என 188 மாணாக்கர்களுக்கு ரூ.74.31 லட்சம் மதிப்பிலும், பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பரமக்குடி, போகலூர், கமுதி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 15 பள்ளிகளைச் சார்ந்த 1,242 மாணவர்கள், 1,194 மாணவியர்கள் என மொத்தம் 2436 மாணாக்கர்களுக்கு ரூ.96.31 லட்சம் மதிப்பிலும், ஆக 2,624 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாக்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..