ஊராட்சி தலைவர்களுக்கு காசோலை அதிகாரம் வழங்க ராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அரசுக்கு தீர்மானம்

இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு, ராமநாதபுரம் கங்கா மகாலில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் எஸ்.ஓ.முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட தலைவராகசித்ரா மருது, துணைத தலைவர்களாக ஜெ.ராஜாமணி,கவிதா மோகன் கீழ்புளி கருப்பையா, மாவட்ட செயலராக எஸ்.டி.செந்தில்குமார்,துணை செயலாளர்களாக மணிமேகலை முத்துராமலிங்கம், எம்.செந்தில், முகமது உமர் பாரூக், ரத்தினம், துரை அரசன் பொருளாளராக எஸ்.முகமது இக்பால் ஒருங்கிணைப்பாளராக கோகிலா வி.ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சரஸ்வதி பாக்யநாதன், ஆர்.வியாகுல சந்தியாகு, கே.நாகரத்தினம், மூபி கேசவன், ஏ.ஜி.சிவக்குமார், எஸ்.காமில் உசேன், எம்கதிரேசன், வி.வினோத்குமார், குழந்தை ராணி துரைராஜ், ஆர்.பத்மாதேவி ரவிச்சந்திரன், சீதா நாகராஜன், லிங்கம், எம்.கே.சாத்தையா, எஸ்.கோபிநாத், எம்.ஜோன்ஸ் கீதா மலைக் கண்ணன், நா.பஞ்சவர்ணம், எஸ். முத்துராமலிங்கம், ஜி.மோகன்ராஜ், ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.அரசு அறிவிக்கும் திட்டங்கள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செயல்படுத்த புதியதாக அமல்படுத்திய ஆன்லைன் பண பரிவர்த்தனையை ரத்து செய்து, காசோலை மூலம் பண பரிவர்த்தனை முறையை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும். கிராம ஊராட்சி வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள குறைகளை கேட்டறிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நில ஆக்கிரப்புகளை அகற்ற ஊராட்சி தலைவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஊராட்சி தலைவர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..