இராமநாதபுரம் குமரன் பள்ளியில் மூலிகை திருவிழா

தேசிய ஆயுஷ் குழும வழிகாட்டுதலின் படி, இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு மருத்துவமனை, குமரன் தொன்மை பாதுகாப்பு மன்றம், நகர் அரிமா சங்கம் சார்பில் மூலிகை திருவிழா ராமநாதபுரம் குமரன் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளி தாளாளர் ராஜா தலைமை தாங்கினர். அரிமா சங்க நிர்வாகிகள் முருகன், ஜெகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், இருதயராஜ்
முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொ) ராஜேந்திரன் வரவேற்றார். மூலிகைக் கண்காட்சியை டாக்டர் உ.கோவிந்தராஜ்
திறந்துவைத்தார். இளந்தளிர் முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.புகழேந்தி, அம்மா மகப்பேறு சஞ்சீவி பிரசுரத்தை வெளியிட்டார். மூலிகை தாவரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் கூறினார். இந்திய கடற்படை கமாண்டர்(ஓய்வு) ரா.நடராஜன் பேசினார்.பாரம்பரியம் மற்றும் மருத்துவ முறைகள் தேர்வில் முதல் நான்கிடம் பிடித்த மாணவர்கள் வினிதா, குணப்பிரியா, தர்மலிங்கம், சந்திரலேகா ஆகியோருக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டன. தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..