உசிலம்பட்டி அருகே செம்பட்டியில் அப்பாவின் பென்சன் பணம் கிடைக்காமல் கடந்த 3வருடங்களாக தவித்து வரும் மாற்றுத்திறனாளி பெண்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது மேலச்செம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 1995ல் பணி ஓய்வு பெற்ற பின் தனக்குப்பின் தன்னுடைய மனைவி ஓய்வுதியம் பெறலாம் என விண்ணப்பித்திருந்தார்.ஆனால் மனைவி பெருமாயி கடந்த 2002ல் இறந்து விட்டதால் தன்னுடைய மகளை நாமினியாக கருவூலத்தில் பதிந்து விட்டு கடந்த 2016ல் இறந்து விட்டார். இவரது மகள் வர்ணபூபதி(62). இவர் முதுகலை பட்டம் படித்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து பின் கடந்த 30 வருடங்களாக கை, கால்கள் செயலிழந்து ஊனமுற்ற பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

கை, கால் நடக்க முடியாமல் 80சதவிகித ஊனமுற்ற பெண்ணான இவர் தனது அப்பாவின் பென்சன் பணத்திற்காக கடந்த 2017ம் ஆண்டில் முதலமைச்சர் தனிபிரிவுக்கு மனு அளித்துள்ளார். அதனை தொடர்ந்து வனச்சரக மாநில கணக்குத்துறை அதிகாரிக்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், பலமுறை மனு அளித்துள்ளார். மனு அளித்திருந்திருந்தாலும் கடந்த 3வருடங்களாக அதிகாரிகளை சந்தித்து வருகிறார் மாற்றுதிறனாளி பெண் வர்ணபூபதி.ஆனால் அதிகாரிகளோ மாற்றிதிறனாளி பெண் என கூட பார்க்காமல் கடந்த 3வருடங்களாக அலைக்கழிpத்து வருவதாக அந்த பெண் கண்ணீர் மழ்க வேதனை தெரிவிக்கின்றார். தற்போது மாற்றிதிறனாளி என்பதால் சொந்த பந்தங்களும் அவரை கைவிட்டு விட்டுச் சென்றதால் தனியாக சோற்றுக்குக்கூட வழியில்லாமல் தவித்து வருகிறார். மேலும் கை. கால்கள் ஊனமுற்றதால் தவக்குவோ, நடக்கவோ முடியாத நிலையில் உள்ளதாக அந்த பெண் வேதனை தெரிவிக்கிறார்.அப்பாவின் பென்சன் பணத்தை நம்பி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்திற்கு இவர் விண்ணப்பிக்கவில்லை.அப்பாவின் பென்சன் பணத்திற்கு ஏங்கி தவிக்கும் மாற்றுதிறனாளி பெண் வர்ணபூபதிக்கு உரிய பென்சன் பணம் வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..