பசுத்தோல் போர்த்திய நரி-டிடிவி தினகரன் குறித்து புகழேந்தி.. துரோகிகளிடமிருந்து அதிமுகவை மீட்கவே அமமுக-டிடிவி தினகரன்…

பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடுவார் எனவும், எனவே அவரை நம்பி இனி கட்சியில் யாரும் இருக்க வேண்டாம் எனவும், இளைஞர்கள் அவர் கட்சியில் இருப்பதை யோசிக்கவேண்டும். மேலும் அவர் பசுத்தோல் போர்த்திய நரி எனவும் தென்காசியில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.தென்காசியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையிலும், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும், 50க்கும் மேற்பட்ட டிடிவி தினகரன் அணி முக்கிய பொறுப்பாளர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளரை சந்தித்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி டிடிவி தினகரன் அவர்களுக்கு பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல ரெடியாக இருப்பதாகவும், தமிழகத்தில் அவர் அரசியல் நடத்த மாட்டார் எனவும், எனவே அந்தக் கட்சியை நம்பி ஒரு சில இளைஞர்கள் இருக்கிறார்கள் எனவும், அவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் பசுத்தோல் போர்த்திய நரி எனவும், 200 ரூபாய் கொடுத்து ஒரு சில கூட்டங்கள் நடத்தி சசிகலா அவர்களை வருவதாகவும், ஜெயா டிவியை பொருத்தவரை முழுக்க முழுக்க அதை டிடிவி தினகரன் துதிபாடும் தொலைக்காட்சி ஆகவும், நமது எம்ஜிஆரையும் அவர் துதி பாடும் நிகழ்ச்சிகள் தொடருமேயானால் அந்த தொலைக்காட்சியும் நாளிதழும் முடங்கிவிடும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வில் தான் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த இயக்கம் தற்போது ஒரு கம்பெனியிடம் உள்ளது. துரோகிகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கவே அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது. சசிகலா விரைவில் வெளிவருவார். எடப்பாடியும், பன்னீர்செல்வமும், ஜெயலலிதா பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பெண்களுக்காக ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசு அதில் கவனம் செலுத்தவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..