அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் அய்யா வைகுண்டரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு வருகிற 03.03.2020 செவ்வாய் கிழமை அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்து உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா பகவான் வைகுண்டசாமியின் அவதார தின விழா வருகிற 03.03.2020 செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு வருகிற 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3-ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். இந்த 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 21.03.2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..