பரிசுகளை குவித்து சாதனை படைத்த தேவகோட்டை பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் பரிசுகளை குவித்து சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தமிழ்ச் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதி நெறி விளக்கம் ஆகிய பாடல்களை கருத்துடன் ஒப்புவித்து இப்பள்ளி மாணவர்கள் ஹரிபிரியா,லெட்சுமி,யோகேஸ்வரன், முத்தய்யன் ,ஆகாஷ்,ஜெயஸ்ரீ,நதியா,வெங்கட்ராமன்,மெர்சி,ராஜேஸ்வரி,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா,சிரேகாஆகிய 14 பேர் பரிசு பெற்றனர்.பரிசு பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் உணவும்,தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..