மதுரை அவனியாபுரத்தில் யோகாவில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகள்

மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் 7 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உலக சதனை நிகழ்த்தினர்.மாணவ மாணவிகளுக்கு யோகா உடல் ஆரோக்யத்திற்காக தினமும் யோகா கற்றுத் தரப்படுகிறது.பெண்கள் பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளியில் யோகாவில் உலக சாதனை படைப்பதற்காக 7 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளைவைத்து யோகா சாதனை நிகழ்த்தினர்.

ஏழு வயதிற்குட்பட்ட 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ராஜக போடாசனத்தை 3 நிமிடம் தொடர்ந்து செய்து உலக சாதனை படைத்தனர்.இது மட்டுமல்லாமல் பூர்ணசலபாசனம், கண்டபிறண்ட ஆசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம் , பூர்ண உஷ்டராசனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் இந்த 7 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் செய்து அசத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..