Home செய்திகள் நமது செய்தி எதிரொலி. குப்பைகளை எரிக்க தடைவிதித்துள்ள அதிகாரிகள்.

நமது செய்தி எதிரொலி. குப்பைகளை எரிக்க தடைவிதித்துள்ள அதிகாரிகள்.

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே காலை ஒரு நபர் மின் வயர்களை எடுத்துக்கொண்டிருந்தார். புகை விண்ணை முட்டும் அளவிற்கு வந்துகொண்டிருந்தது.  அப்பொழுது துப்புரவு பணியாளர் இருளப்பன்  மின் வயர்களை எரித்த நபரை எச்சரித்து கொண்டு இருந்தார். உன்னை காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் மேலும் எங்கள் உயரதிகாரியிடம் உன்னை பற்றி தகவல் கொடுக்க இருப்பதாகவும் விசாரித்துக் கொண்டிருந்தார் .பின் அவரே இரு வாளிகளில் தண்ணீர் எடுத்துவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார். இவரது செயல்பாடு அப்பகுதியினர் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின் அவரிடம் நமது செய்தியாளர் நடந்தவற்றை கேட்டபோது அவர் கூறியது -76வது வார்டு பொருத்தவரையில் எந்த பகுதியிலும் குப்பை எாிக்க கூடாது எனவும் மீறி எரித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் எரித்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார் என தகவல் தெரிவித் தார். இது நமது செய்தி தளத்தில் தொடர்ந்து செய்தி பதிந்துவிட்டது காரணத்தினால் உயரதிகாரிகள் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.. சமீபத்தில் ஒரு துப்புரவு பணியாளர்களை இடைநீக்கம் செய்யப்பட்டு பின் நமது வேண்டுகோளை ஏற்று மீண்டும் பணி நியமனம் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!