பாலக்கோடு உழவர் சந்தை பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்:- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரததால் தூர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம்.

பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் வணிககடைகள் மற்றும் உழவர் சந்தை , வேளாண் காய்கறிகளை பதப்படுத்தும் கிடங்கு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதில் தூர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் சரியான கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருப்பதாலும், கோழி கழிவுகளை கொட்டுவதாலும் வெளியேறும் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் தெருவில் வரும் மழை நீர் மற்றும் கடைகளில் இருந்து வரும் மழைநீரும் மற்றும் கழிவு நீர் இணைந்து தேங்குவதால் சில நாட்களிலே துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் கழிவுநீர் கால்வாயில் அடைத்து கழிவுநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கழிவு நீர் பாதிப்பு குறித்து பலமுறை பேரூராட்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்றி கொசு தொல்லையில் இருந்து பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..