உசிலம்பட்டியில் கட்சி நிர்வாகியின் தந்தை மறைவிற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒச்சாத்தேவர் தெருவில் உள்ள அதிமுக மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி பொருலாளர் ஒச்சாத்தேவர் என்ற கட்சி நிர்வாகியின் தந்தை செல்வராஜ் கடந்த 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இன்று அன்னாரது மறைவிற்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சென்று அவரது திருஉருவப் படத்தை திறந்து வைத்தார், மேலும் கழக நிர்வாகி ஒச்சாத்தேவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மரியாதை நிமித்தமாக அமைச்சரை சந்திக்க வந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் சீர்மரபினர் சமுதாய மக்களுக்கு டி.என்.டி சான்றிதழ் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர், மேலும் டி.என்.டி. சான்றிதழ் மூலம் பெறக்கூடிய அரசு சலுகைகளை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை கலைந்து முழுமையான சலுகைகளை பெற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதில் தமிழ்நாடு ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் சோலை ராஜா மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..