இராமநாதபுரத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ..

தமிழகத்தில்  பெண் குழந்தைகள்  மற்றும் மகளிர் நலனில் அக்கறை கொண்டு தொட்டில் குழந்தை திட்டம், ஏழைப் பெண்களின்  திருமணத்திற்கு திருமண உதவித் தொகை, விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்,  அனைத்து மகளிர் காவல் நிலையம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பு திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.

அவரை  கவுரவிக்கும் நோக்கில் அவரது பிறந்த நாளான பிப். 24-ஆம் நாளை ‘மாநில பெண்  குழந்தைகள் பாதுகாப்பு தினம்” ஆக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனடிப்படையில், ராமநாதபுரத்தில் மாவட்ட  ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் குழந்தைகளுக்கு இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து  தெரிவித்தார்.

இதில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மு.கயல்விழி உட்பட அரசு அலுவலர்கள் பெண் குழந்தைகள் கலந்து  கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..