சார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…

சார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…

கருத்தாளர்களாக திருப்பூரிலிருந்து இயற்கை விஞ்ஞானி ஜெகநாதன் மற்றும்

சேலத்திலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில குழு உறுப்பினர் சகஸ்ரநாமம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டார்வின் ஆயிரம் நிகழ்ச்சி ஒன்று.

பெரியார் ஈ வே ரா அரசு கலைக் கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாநகரம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் உமா மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும் ஆரோக்கிய இயக்க மாநில ஒருங்கிணைப்பாளருமான சாந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

பேராசிரியர்கள்மாணவர்கள் என 160 பேர் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கத்தில் இயற்கை ஆர்வலரும் விஞ்ஞானியுமான திருப்பூர் ஜெகநாதன் நழுவு பட காட்சியுடன் கருத்துரை வழங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன் தான் படித்த கல்லூரியில் ஒரு கருத்தாளர் ஆக மீண்டும் உள்ளே நுழைந்து மாணவர்களுக்காக கருத்துரை வழங்குவதை மிகவும் நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினார்.

பறவைகளும் பரிணாமமும் என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்கில் மாநகர பொறுப்பாளர் பேராசிரியர் ஜெரெமையா உட்பட பலர் பங்கு கொண்டனர்.

சார்லஸ் டார்வின் தின நிகழ்ச்சி 2.

டார்வின் ஆயிரம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் ஜெரிமியா ஆகியோருடன் பறவைகளை பார்த்தல் நிகழ்ச்சி பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகில் உள்ள ஏரி குளங்களை சார்ந்த இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சக்திவாய்ந்த பைனாகுலர் கேமரா இவற்றின் உதவியுடன் பறவைகளை பார்த்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளித்து இந்த நிகழ்ச்சியை மிகவும் இனிமையான நிகழ்வாக
விஞ்ஞானி ஜெகநாதன் மாற்றியது மிகுந்த வியப்பையும் எதிர்பார்ப்பையும் அளித்தது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வையும்
அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் திருமிகு சாந்தி மற்றும் பேராசிரியர் ஜெரெமையா ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

டார்வின் ஆயிரம் நிகழ்ச்சி 3.

திருச்சிராப்பள்ளி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் காலை 11 மணிக்கு சார்லஸ் டார்வின் 1000 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக
டார்வின் கொள்கையும் அதற்கு அப்பாலும் என்ற தலைப்பில் சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில குழு உறுப்பினர் திரு பி சகஸ்ரநாமம் நழுவு பட விளக்கங்களுடன் கருத்துரை வழங்கினார்.

ஹோலி கிராஸ் கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநகரத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஹோலிகிராஸ் கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஹார்னி ஐயோனா அவர்களும் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த முனைவர் ராஜலட்சுமி திருச்சி மாநகர செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் சீதா கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சார்ந்த பதினைந்து பேராசிரியர்கள் மற்றும் 70 மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்க முடிவில் மாணவிகள் கூர்மையான சந்தேகங்களை எழுப்பி அதற்கான விடைகளையும் கேட்டறிந்தனர்.

டார்வின் ஆயிரம் நிகழ்ச்சி 4.

துறையூர் அருகில் உள்ள புத்தனாம்பட்டி என்ற கிராமத்தில் நேரு நினைவு கல்லூரியில் மதியம் 3 மணிக்கு டார்வின் ஆயிரம் நிகழ்ச்சியின் நான்காம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் பொறியாளர். பொன். பாலசுப்பிரமணியம் கருத்தரங்கத்தை தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் சாந்தி மற்றும்
பேராசிரியர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த னர். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் திருவள்ளரை பகுதியை சேர்ந்த முருகேசன் மாநகர செயலாளர் மனோகர் ஆகியோர் அறிவியல் இயக்கம் அதன் வேலைகள் குறித்து சிற்றுரையாற்றினர்.
மாநில கருத்தாளர் சகஸ்ரநாமம் நழுவு படக்காட்சியை தமிழில் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கம் அளித்தார் .இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 90 பேர் கலந்து கொண்டனர்.

மேற்சொன்ன நான்கு நிகழ்வுகள் முடிந்ததும் மாநில மையத்தில் இருந்து தருவிக்கப்பட்ட டார்வின் குறித்த பிரச்சார கையேடு மற்றும் டார்வின் முகமூடியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

நண்பர்களே ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாநகரத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பாக நேற்றைய தினம் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றாலும் பேராசிரியர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் இந்த நான்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம்.

கருத்தாளர்கள் சேலம் சகஸ்ரநாமம் மற்றும் திருப்பூர் ஜெகநாதன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பெரியார் ஈவேரா அரசு கலைக் கல்லூரி
பிஷப் ஹீபர் கல்லூரி
ஹோலி கிராஸ் கல்லூரி புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரி ஆகியவற்றை சார்ந்த விலங்கியல் துறை பேராசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..