செங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..

செங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்
ஜெயலலிதா பிறந்த தினவிழா
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. செங்கம் ராஜவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் எம்பியுமான வனரோஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் திருவண்ணாலை தெற்கு மாவட்ட செயலாளருமான சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாநில விவசாய அணி செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாசலம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு. அதிமுக நிர்வாகிகள் பீரங்கி வெங்கடேசன், வக்கீல் சங்கர், பாரிபாபு, விஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கண்ணக்குருக்கை கிருஷ்ணமூர்த்தி, வளையாம்பட்டு சங்கர், தலைமைக்கழக பேச்சாளர் வெங்கட்ராமன், நகர பேரவை செயலாளர் குமார், மகரிஷி பள்ளி தலைவர் மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பத்மாமுனிக்கண்ணு, ஊராட்சி செயலாளர்கள் புதுப்பட்டு தனஞ்செயன், பாச்சல் மணி, அந்தனூர் கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் குப்பநத்தம் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் கே.கே.மணி, ஒன்றிய கவுன்சிலர் பென்னாத்தூர் முருகன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர்கள் நாச்சிப்பட்டு கோபி, செங்கம் முரளிதரன், வக்கீல் தினகரன், மண்டல பொறுப்பாளர் ஆர்.ஜெ.அய்யனார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகம், நகர செயலாளர் ஆனந்தன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏ.ஜி.ராஜா, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சுந்தர், டீக்கடை ராஜாமணி, பூக்கடை ஜெகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் எம்பியுமான வனரோஜா ஏற்பாடு செய்து நடத்தினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image