இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நவாஸ்கனி எம்பி நிதியுதவி..

பிப்.20 ஆம் தேதி சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமடைந்த மீனவர் சேசு அலங்காரம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேசு அலங்காரத்தை, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

மேலும்  அரசிடம் உரிய நிவாரண உதவிகள் பெற்று தருவதாக கூறினார். இது தொடர்பாக நவாஸ் கனி எம்பி., ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கையில், ராமேஸ்வரம் மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், கைது நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..