இராமநாதபுரத்தில் அதிமுக., சார்பில் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்..

இராமநாதபுரத்தில் நகர் அதிமுக., சார்பில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வண்டிக்காரத் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன் (ராம்கோ கூட்டுறவு சேர்மன்) அதிமுக கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னாள் மாவட்ட துணை செயலாளர் எஸ்.ராமசேது, ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.ராமமூர்த்தி, நகர் பொருளாளர் எம்.ஜெயக்குமார்,  முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன்,  நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் தஞ்சி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி எம். முத்துப்பாண்டி, நகர் இளைஞர் பாசறை செயலாளர் கே.எஸ்.மணிகண்டன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பி.சந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, நாகஜோதி, வாசுகி, வார்டு செயலர்கள் சுரேஷ், குமார், செல்வக்குமார், செல்வம் உள்பட பலா கலந்து கொண்டனர்.

அண்ணா தொழிற் சங்க பேரவை சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை நுழைவு வாயிலில் நடந்த ஜெ.ஜெயலலிதா பிறந்த விழாவிற்கு அண்ணா தொழிற் சங்க பேரவை புறநகர் கிளை செயலாளர் ஜெ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட அவைத்தலைவர் கொடி ஏற்றினார்.

அண்ணா தொழிற் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பி.சந்திரன், கிளை தலைவர் பொன்னுச்சாமி, எம்.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..