அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி மனித சங்கிலி..

இராமநாதபுரம் மாவட்டம், சாத்தன் குளம், அரசு மேல்நிலை பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி இன்று (24/02/2020)  மாணவிகள் அனைவரும் மனித சங்கிலி ஏற்படுத்தினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மனித சங்கிலியை தலைமை ஏற்று தொடக்கி வைத்தார். மாணவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி சாத்தான்குளம் ஊராட்சி சாலையில் மனித சங்கிலி ஏற்படுத்தினர். மனித சங்கிலி நிகழ்வில் ஆசிரியர்கள் சாம்ராஜ், கதிர்மணி,வத்சலா தேவி, புனித ராணி, யமுனா, சுமதி மற்றும் உடற்கல்வி கணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவ,மாணவியர் அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

பின்னர், நடைபெற்ற பரிசு அளிப்பு விழாவில் உதவி தலைமை ஆசிரியர் சுவாமி தாஸ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சாந்தி வரவேற்று பேசினார். ஆசிரியர் திருமூர்த்தி பெண் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து ஆசிரியர் ஜெரோம் பேசினர்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் பொருட்டு, “பெண் குழந்தைகள் பாதுகாப்பு” தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக, ஆசிரியர் யமுனா நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஜெரோம் செய்து இருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..