இராமநாதபுரத்தில் தி.மு.க மாவட்ட செயற்குழு கூட்டம்..

இன்று 24:02:2020 இராமநாதபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் தீனதயாளன் தலைமையிலும்,  மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையிலும் பட்டினம் காத்தான் செக்போஸ்ட் அருகே உள்ள கிங்ஸ் மினி மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்களாக திமுகழகத்தின் 15வது அமைப்பு தேர்தல் மற்றும் கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததானம் நடத்துவது எனவும். நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் சு.ப தங்கவேலன், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சு.ப.த திவாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  இன்ப ரகு, மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர,பேரூர் கழக, நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..