பாலக்கோடு அருகே அமைச்சர் தலைமையில் எருதுவிடும் விழா…

பொங்கலை முன்னிட்டு  பாலக்கேன் அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழாவினை உயர் கல்வித துறை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்..

பாலக்கோடு.பிப்.24-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுஅருகே உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார் இதில்500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

பொங்கலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக பாலக்கோடு அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, இராயக்கோட்டை மற்றும் தர்மபுரி, கிருஷ்னகிரி மாவட்ட  சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன்  கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்தனர் அதனை தொடர்ந்து காளைகள் ஒவ்வென்றாக அவிழ்த்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து கண்டு களித்தனர்,

சிறப்பாக மாடுகளை   பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் பிடிபடாமல் ஓடிய மாடுகளுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..