கோவை பிரின்ஸ் கார்டன் ஹோட்டலில் இன்று 23/02/2020 ‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது..!

கோவை பிரின்ஸ் கார்டன் ஹோட்டலில் இன்று 23/02/2020 ‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முறையாக தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் மூலமாக பல்வேறு மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் அதிகாரிகளாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா தோழர் பாண்டியன், மூத்த செய்தியாசிரியர், தோழர் ரங்கபாஷ்யம், ராஜ் டிவி ஜெய்சங்கர் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த நிர்வாகிகள் தேர்வு தேர்தலில் கீழ்க்கண்டவாறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!

மாநிலத் தலைவராக A.J.B. சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளராக கோவை B பிரதீப் குமார், மாநிலப் பொருளாளராக டாக்டர் T.இளையராஜா.

மாநிலத் துணைத் தலைவர்களாக A.ஜெயக்குமார், R.ரங்கபாஷ்யம், D. ரமேஷ், K. ஜெய்சங்கர், அந்தோணி செல்வா, கோவை ராஜ்குமார்.

மாநில இணைச்செயலாளர்களாக, லலித் சூடு, பார்த்திபன், ஜோன்ஸ் சங்கர் தாஸ், ஜோஸ்வா, தில்ஷாத், இஸ்மாயில், பவுல் ஜோசப்,சஞ்சை, செய்யது ஆப்தீன், ரங்கராஜன், ஜெய்லானி, வாசன்.

மாநில அமைப்பாளர் திரு. ராஜ்குமார்.

மாநில ஒருங்கிணைப்பாளர்களாக காந்தி,லியோ ஜேக்கப் ராஜ், சாலமன் ராஜ், முகமது சுலைமான்.

தலைமை நிலையச் செயலாளர், தோழர். வல்லரசு செங்குட்டுவன்,

தலைமை நிலைய இணைச் செயலாளராக ரூபா,விஜயரமணன், சுரேஷ்.

மாநில செயற்குழு உறுப்பினர்களாக தோழர். எட்வின் ஆரோக்கிய சாமி, ரகுநாதன், ஆப்ரகாம்,ஜெய்னுல் ஹூசைன்,பூவராகவன், முகமது தமீம்,பிரபு,ரியாஸ், விஜய் பாலாஜி, சக்திவேல், முனிர், செல்வமணி, மேரி ராஜ்குமாரி, சுரேஷ்.

மாநில தலைமைச் செய்தி தொடர்பாளர், தோழர் ஜெ.அஸ்கர்.

மாநில இணைச் செய்தி தொடர்பாளர்களாக தோழர். சுபாஷ் கண்ணன், சென்னை பிரதீப், விக்னேஷ்.

ஆகியோர் முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர் அனைவரது பணிகளும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

மேலும் கூட்டத்தில் பல்வேறு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த பத்திரிகையாளரும், தினத்தந்தி நாளிதழ் அதிபருமான திரு சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,,,

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட அரசுக்கும் இதற்கு காரணமாக இருந்த அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,,

7 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வழக்குகளை அரசிடம் முறையாக சமர்ப்பிக்கும் சங்கத்தின் உறுப்பினர்களை மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

கோவை பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வீட்டு மனைகள் வழங்கிய தமிழக அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து பெற்றுத்தந்த அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்.

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக உண்மையான பத்திரிகையாளர்களை கொண்டு இயங்குகிறது ஆகவே சென்னையில் சங்கத்திற்கென தமிழக அரசு சொந்த கட்டிடம் வழங்க வேண்டும்.என்பவை உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவன்:

ஜெ. அஸ்கர்,

மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்!

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்!

புனித ரமலான் வாழ்த்துக்கள்..