மாநில அளவிலாளான கணிதத்திறன் போட்டில் (ஸ்பெக்ட்ரா 2020) புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் பரிசு குவிப்பு

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் மாநில அளவில் கல்லுரிகளுக்கு இடையே நடைபெற்ற ஸ்பெக்ட்ரா 2020 என்ற கணிததிறன் போட்டியில் 500கும் மேற்றப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் நேரு நினைவு கல்லூரி கணிதவியல் துறையை சார்ந்த 16 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் இரண்டாம்மாண்டு முதுநிலை கணிதவியல் மாணவிகள் பிரியா மற்றும் பிரீத்தா கோலத்தில் கணிதம் (Maths Rangoli) போட்டியில் முதல் பரிசு பெற்றனர். இளநிலை இரண்டாம்மாண்டு கணிதவியல் மாணவர்கள் கலையரசன் மற்றும் செந்தில்ராஜ் நடன (Dance) போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர். இரண்டாம்மாண்டு முதுநிலை கணிதவியல் மாணவி பிரியா கணித வினாடி வினா (Maths Quiz) போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார்.போட்டியில் பரிசு பெற்றவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் A.R.பொன்பெரியசாமி, துணை முதல்வர் முனைவர் குமாரராமன், கல்லூரி குழுத்தலைவர் பொன்பாலசுப்ரமணியம், செயலர் திரு. பொன்ரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்தினர்.இந்த போட்டிக்கு தேவையான ஏற்பாடுகளை கணித உதவி பேராசிரியர் முத்தமிழ்வாசன் செய்து இருந்தனர்.

செய்தி: இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..