கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி சிலம்ப வீரர்கள்  16 பதக்கங்களை அள்ளி குவித்து சாதனை…!

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி சிலம்ப வீரர்கள்  16 பதக்கங்களை அள்ளி குவித்து சாதனை…!

பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாநில அளவிலான சிலம்பப் போட்டி கோயம்பத்தூர் தியாகி எம். ஜி. ராமசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் திருச்சி காவலர் அரவிந்த் அவர்களின் தலைமையிலான மாணவ மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டனர்.

300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலத்து கொண்ட சிலம்ப போட்டியில் ஆண்கள் பிரிவில் தனித்திறமையில் காமேஸ்வரன், ஹரீஸ்வரன் முதல் பரிசும் மற்றும்
ஹரிஹரசுதன் இரண்டாவது பரிசும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில்
சுகிதா, நந்தினி மற்றும் ஜெயஸ்ரீ முதல் பரிசும் நவசக்தி, நிவாஸினி மற்றும் சந்தியா இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.

மேலும் கம்பு சண்டையில் ஆண்கள் பிரிவில் காமேஸ்வரன், ஹரிஷ்வரன் மற்றும் ஹரிஹரசுதன் முதல் பரிசும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் சந்தியா, நவசக்தி, நிவாஸினி முதல் பரிசும் சுகிதா, நந்தினி இரண்டாம் பரிசும்,
ஜெயஸ்ரீ மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்.

காவலர் அரவிந்த் சிலம்பக்கலையை ஓய்வு நேரத்தில் எந்த வித கட்டணமும் இன்றி கற்றுக்கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..