திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பீதியில் பொதுமக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பீதியில் பொதுமக்கள்..!

செங்கம் பகுதியிலிருந்து துக்காப்பேட்டை செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இருந்து கோடைக்காலங்களில் அங்கிருந்து இரை தேடி ஆண்டுதோறும் கூட்டம், கூட்டமாக குரங்குகள் செங்கம் நகருக்குள் வருவது வழக்கம். ஆனால், மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையிலும், குரங்குகள் செங்கம் நகருக்குள் படையெடுத்துள்ளது.இந்த குரங்குகள் மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு வரும் இணைப்பு வயர்கள் மீது தொங்கியபடி ஓடுதல், கேபிள் டிவி வயர்களை பிடித்து தொங்குதல் போன்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றன. அதுமட்டுமின்றி, வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்புகளை சாப்பிடுவது, தின்பண்டங்களை தூக்கிக்கொண்டு ஓடுவது, அதை தடுக்க வருபவர்களை கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

குறிப்பாக, வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து விடும்போது பெண்கள், குழந்தைகள் அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் செங்கம் நகரில் தளவாநாயக்கன் பேட்டை ,மில்லத் நகர் பெருமாள் கோயில் தெரு , ராஜவீதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு நடக்கிறது.இதேபோல் கிராமப்பகுதிகளிலும் குரங்குகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட உட்பட பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற நிலை உள்ளது.எனவே, செங்கம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம், கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் இணைந்து குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

செங்கம் தாலுக்கா எம். சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image