ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் எம்பி வலியுறுத்தல்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் எம்பி வலியுறுத்தல்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்.20 ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த சேசு அலங்காரத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.இதனை முடிவுக்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை, மீன்வளத் துறை அமைச்சகம் உடனடியாக செயல்பட வேண்டும்.மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற துயர சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடியாக இலங்கை அரசுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..