பெரியபட்டணத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம்  பெரியபட்டணத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி இமாம் முஹமது ஜஃபர் வரவேற்றார். அனைத்து சமுதாய தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ., திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸன் பைஜி சிறப்புரை ஆற்றினார்.  திமுக., சார்பில் திருப்புல்லாணி மணி மாதவன், காங்கிரஸ் மாநில செயலாளர் விஜயன், மார்க்ஸிஸ்ட்  திருப்புல்லாணி ஊராட்சி  கிளை செயலாளர் சொக்கலிங்கம், எஸ்டிபிஐ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அலி, நாம் தமிழர் கட்சி திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் தீபம் பாலா  ஆகியோர் உரையாற்றினர்.

அல் ஃபலாஹ் பள்ளி இமாம் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார். திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் மற்றும்  ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image