பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒற்றை குரங்கு சேட்டை. குழந்தைகள் அச்சம்

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு குரங்கு ஒன்று அந்த பகுதியில் சுற்றி வருகிறது.  குழந்தைகள் விளையாடும் பொழுது குழந்தைகளை கடிக்கவும் பாய்கிறது. இதனால் குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள்.இந்த குரங்கானது திருப்பரங்குன்றத்தில் இருந்து வழி தவறி உணவுக்காக இப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் இது ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்வதாகவும் அப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர். இதை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..