கழிவறைக்குள் விழுந்த கார் சாவியை எடுக்க முயன்ற அவர் கழிவறைக்குள் சிக்கிய கை மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அவசரகால மீட்பு ஊர்தி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பாத்ரூமில் உள்ள கழிவறைக்குள் காரின் சாவி விழுந்ததை எடுக்க முயற்சித்தவரின் கை சிக்கிக் சிக்கிக்கொண்டது. அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கையை எடுக்க முயற்சித்தபோது கையை எடுக்க முடியவில்லை. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே மதுரை டவுன் நிலைய அதிகாரி  வெங்கடேசன் தீயணைப்பு துறையினர் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கழிவறையை உடைத்து அவர் கையை வெளியே எடுத்தனர். இதனால் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..