கோழிகளுக்கு கொரோனாவா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வதந்தி பீதியில் பொதுமக்கள்..!

கோழிகளுக்கு கொரோனாவா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வதந்தி பீதியில் பொதுமக்கள்..!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் செயல்படும் கோழிப்பணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், கடைகளில் கோழி இறைச்சி விற்பனை மந்தமடைந்துள்ளது.

இளம்பிள்ளை பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிக்கன் கடைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், இளம்பிள்ளை பகுதியில் உள்ள பண்ணை கோழிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவி இருப்பதாக தகவல்கள் வைரலாக பரவி வந்தன.

இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதில் தவிர்த்து வந்தனர்.

இந்த தகவலால் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் வாட்ஸ்ஆப்பில் தவறுதலாக குறுஞ்செய்தியை அனுப்பியவர்களை கண்டுபிடிக்குமாறு, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பண்ணை கோழிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவி இருப்பதாக தகவலால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..