பாப்பாரப்பட்டியில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது..

தர்மபுரி மாவட்டம் பழைய பாப்பாரப்பட்டி கிராமத்தில் அங்காளம்மன் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறு வேடங்களை அணிந்து அம்மன் அருள் வந்து ஆடினர். சில பக்தர்களுக்கு ஆக்ரோஷமாக அருள் வந்து இடுகாட்டுக்கு சென்று எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் கவ்விக் கொண்டு வந்து அங்காளம்மன் சிலை முன் இட்டனர் இந்த நிகழ்ச்சியானது பார்ப்பவர்களை பெரிதும் பரவசம் அடையச் செய்தது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும் தீச்சட்டி ஏந்தியும் பால்குடங்களை தலையில் சுமந்தும் எடுத்து வந்து அங்காளம்மன் சிலை முன் சமர்ப்பணம் செய்தனர் தாரை தப்பட்டை பம்பை மற்றும் மங்கள வாத்திய செண்டை மேளத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்க்கு பக்தர்கள் திரண்டிருந்தனர்.பெரும்பாலான பக்தர்கள் 20 அடி நீளமுள்ள அலகுகளை குத்தியிருந்தனர் காலை முதலே அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.பஸ் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப் பட்டிருந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..