பேரையூர் மற்றும் கமுதியை சேர்ந்த மூவருக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது..

கமலாலயம் அறக்கட்டளை, கலாமின் கனவு அறக்கட்டளை மற்றும் உயிர் தளிர் ஆராய்ச்சி மையம் இணைந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது-2020 என்ற விருது வழங்கும் விழா நேற்று 23.2.2020.ஆம் தேதியன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சக்தி பேலஸில் நடைபெற்றது.

இவ்விழா சென்னை முன்னால் மேயரும் மனிதநேயம் அறக்கட்டளையின் நிருவருமான சைதை.துரைசாமி  தலைமையில் நடைபெற்றது. கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி பேராசிரியர் டாக்டர்.பால்பாண்டி மற்றும் முன்னால் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பேரன் ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் ஷலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேரையூரை சேர்ந்த மக்கள் பாதை கமுதி ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளரும் சட்டக்கல்லூரி மாணவருமான ம.மனோஜ் பிரபாகரன் விளையாட்டுத்துறையிலும், கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி பேராசிரியர் டாக்டர். கஜேந்திரநாயகம் கல்வித்துறையிலும், கமுதியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட வணத்துக்குள் கமுதி அமைப்பிற்கு சமூக சேவை துறையிலும் சாதனையாளர் விருது 2020 வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..