கல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!

கல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!

நல்லொழுக்கத்தை போதிக்கும் கல்விக் கூடங்களில் மாணவர்களை அச்சுறுத்தும் ஒழுக்கமற்ற செயல்களால் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு அச்சம் நிறைந்த சூழல் தற்போது உருவாகி வருவதையே பின்வரும் சம்பவம் எடுத்துரைக்கிறது.

கல்வி கற்கும் மாணவர்களிடையே நடைபெறும் ராகிங் என்னும் கொடுமை இன்னும் முடிந்தபாடு இல்லை. பல உயிர்களை காவு வாங்கிய இந்த ராகிங் கொடுமை உலக நாடுகள் முழுவதுமே நீடித்து வருகின்றது.

மாணவர்களிடையே நிலவும் ராகிங் கொடுமையை தடுக்க கல்வி நிலையங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத அவலமே நீடிக்கிறது.

அதன்படி சமீபத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மனம் வெம்பி தற்கொலை செய்துக்கொள்வதாக தனது தாயிடம் பேசும் வைரல் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான்.

இந்நிலையில், பிரிஸ்கோன் பகுதியில் படிக்கும் தனது மகனை அழைத்துச் செல்வதற்காக கடந்தவாரம் யர்ராகா சென்றுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து வீட்டிற்கு வராமல் குவாடன் பேல்ஸ், தான் அனுப்பிவித்த மோசமான சம்பவத்தை சொல்ல முடியாமல் அழுதுள்ளார். அவரை ஒருவழியாக சமாதானம் செய்து வைத்து தாய், நடந்தவற்றைக் கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் அந்த தாய் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் குவாடன் பேல்ஸ், தன்னை உடன் படிக்கும் சக மாணவர்கள் உருவ கேலி செய்வதாகவும், குள்ளன் என அழைப்பதாகவும் அழுதுக் கொண்டே பேசுகிறார். மேலும், “எனக்கு இங்கு வாழ்வதற்கே விருப்பமில்லை; ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் இறந்துவிடுகிறேன். இல்லை யாராவது என்னை கொன்று விடவேண்டும் என எண்ணினாலும் எனக்கு சந்தோஷம் தான்” என பேசுகிறான்.

சிறுவன் பேசும் இந்த வார்த்தைகள் மூலம் எவ்வளவு பாதிப்புகளை அந்த சிறுவன் அனுபத்திருப்பான் என்பதை வீடியோ பார்க்கும் அனைவராலும் உணரமுடியும். தாயின் சமாதானத்தை ஏற்க மறுத்து சிறுவன் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடன் தாய் முறையிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

குழந்தைக் கல்வி முறையில் நல்லொழுக்கத்தை ஏற்படுத்திட தேவையான அனைத்தையும் பாடத்திட்டங்களில் கொண்டு வருவது மிக அவசியமாக உள்ளது.

பாடத்திட்டங்கள் ராகிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைப் பருவத்தில் இது பெரிய குற்றம் என புரியவைக்க முடியவில்லை என்றால் எதிர்காலத்திலும் இந்த அவலம் தொடரும்.ஒழுக்கமற்ற சமூகம் உருவாகுவதை தடுக்க இயலாத நிலைக்கு தள்ளப்படும்.மேலும் கல்வி நிலையங்களில் அதிக மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கல்வியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் ஒழுக்கமற்ற மாணவர்கள் உருவாக கல்விக்கூடங்களே காரணமாக அமையக்கூடும் என்ற அச்சத்தால் எதிர்காலத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..