பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)

பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் (Pierre Jules César Janssen) பிப்ரவரி 22, 1824 பாரிஸ்ல் பிறந்தார்.ஜான்சென் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்றுப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனார்.பல அறிவியல் நிகழ்வுகளை ஆராய பல நாடுகளுக்கும் சென்று வந்தார். 1857 ஆம் ஆண்டில் நிலநடுக் கோட்டின் காந்தத்தன்மையை ஆராய பெரு நாட்டிற்குச் சென்றார். 1867ல் அசோரெஸ் தீவுகளில் ஒளியியல், காந்தத் தன்மைகளை ஆராய்ந்தார். வெள்ளிக்க் கோளின் நகர்வுகளை 1874ல் ஜப்பானிலும், 1882ல் அல்ஜீரியாவிலும் வெற்றிகரமாகக் கண்டறிந்தார். முழுமையான சூரிய கிரகணத்தை ஆராயும் பொருட்டு இத்தாலி (1867), குண்டூர் (1868), அல்ஜியேர்ஸ் (1870), சியாம் (1875), கரொலைன் தீவுகள் (1883), ஸ்பெயின் (1905) ஆகிய இடங்களுக்கு தனது குழுவினருடன் சென்றார்.

இந்தியாவில் சூரிய கிரகணத்தை ஆராயும் போது சூரிய அலையில் 587.49 nm அலைநீளம் கொண்ட ஒரு வெளிச்சமான மஞ்சள் கோட்டைக் கண்டார். முதற் தடவையாக இந்த ஒளிப்பட்டைக் கோடு அறியப்பட்டது.ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.இது ஒரு அறிமுகமில்லாத முதற் தடவையாக இதுவே வெளி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமம் ஆகும். லொக்கியர் இதற்கு சூரியனின் கிரேக்கப் பெயரான (helios, ஹேலியோஸ்) எனப் பெயரிட்டார்.இதுவே பின்னாளில் ஹீலியம் என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 23, 1907ல் தனது 83வது அகவையில் மெனுடொன் (Meudon) என்ற நகரில் இவுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர்,நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..