திருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி ஆசிரியர் களுக்கு வேலை வாய்ப்பு முகாம் அந்த பள்ளி நிர்வாகதால் நேரு நினைவு கல்லுரியில்  நடைபெற்றது.இதில் நேரு நினைவு கல்லுரியின் பல துறைகளை சார்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் 16 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாதம் 15000 ஊதியத்தில் ராமகிருஷ்ண மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிக்கு பணி நியமன ஆணை பெற்றனர்.

நியமன ஆணை பெற்றவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் .பொன்பெரியசாமி,துணை முனைவர் முதல்வர் குமாரராமன், கல்லூரி குழுத்தலைவர் பொன்பாலசுப்ரமணியம், செயலர்  பொன்ரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்தினர்.இந்த நிகழ்ச்சியை வேலைவாய்ப்பு துறை டீன் முனைவர் விஜி சாரல் எலிசபெத், துணை டீன் முனைவர் கஸ்துரி மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

செய்தி: இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..