மத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..

மத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள்(savings,deposit) சேமிப்பு மற்றும் வைப்பு தொகை வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஒரே நேரத்தில் அனைவரும் எடுத்து அமைதியான முறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

இது தேரிழந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் (IOB) வங்கியை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. எனவே IOB வங்கியின் மேலிடத்தில் இருந்து அழுத்தம் காரணமாக, வங்கியின் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் 21.02.2020 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வருகை தந்து மக்களிடம் தங்கள் பணத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இது குறித்து மக்கள் கூறுகையில் எங்களுக்கு வங்கியோ ஊழியர்களோ எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இது தான் எங்கள் நோக்கம் என்பதை தெளிவாக அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக எடுத்துக் கூறினர்.

இந்த காரணத்திற்காகத் தான் நாங்கள் பணம் எடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம் என்ற காரணத்தையும், இதனை உங்கள் மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் என்பதையும், தங்களின் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பையும் நூதனமான முறையில் பதிவு செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தால் தேரிழந்தூர் (IOB) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அதன் விளைவாக வங்கியின் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் நேரடியாக ஜமாஅத்தினர்களை சந்தித்து எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது இதுவே முதல் முறை.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு நூதன போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும்,நாளுக்கு நாள் மத்திய அரசின் இது போன்ற கருப்புச்சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..