2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா? பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.!

2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா? பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. எனினும், ரூ.2000 நோட்டுக்கள் கள்ளத்தனமாக அச்சடிப்பது அதிகரித்துள்ளதால், இதனை முடிவுக்குக் கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

அதன்படி, ரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதற்குப் பதிலாக கூடுதலாக ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டது. இதில், ரூ.200 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.

அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் ரூ.2000 நோட்டுகள் மக்களிடையே புழங்குவது குறைந்து வருகிறது.

ATM-களிலும் இந்த நோட்டுகள் வங்கிகள் சார்பில் அதிகமாக வைக்கப்படவில்லை.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கள், இனி தங்களது வங்கி ஏடிஎம்களில் வைக்கப்படாது என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரும் 1ம் தேதி முதல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைக்கும் வசதி, இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து கொண்டு, வாடிக்கையாளர்கள் சில்லரை பெற சிரமப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. அதேசமயம் டெபாசிட் செய்ய வருபவர்கள் வழங்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுகொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது, ஏடிஎம்மில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைக்க பயன்படுத்தப்படும் இடத்தில், 200 ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்டு, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இந்தியன் வங்கி ஏடிஎம்களில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..