ராமேஸ்வரத்தில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு ராமேஸ்வரம் அருகே ராமகிருஷ்ணபுரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோபால். இவரது மனைவி வனிதா. கோபாலின் சகோதரிக்கு அவரது தந்தை பிச்சை சொத்துகளை பாகப்பிரிவினை செய்து, இதில் ஒரு பாகத்தை அவரது மகளுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்தார். இதற்கு கோபால் மனைவி வனிதா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக 2013 ஜூலை 19ல் நடந்த தகராறில் ஆத்திரமடைந்த கோபால், வனிதாவை கத்தியால் குத்திக்கொலை செய்தார். ராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்கு பதிந்து கோபாலை கைது செய்தனர். ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி பகவதி முன்னிலையில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோரஞ்சிதம் ஆஜரானார். மனைவியை கொன்ற கோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..