Home செய்திகள் சாத்தான்குளம் அரசு பள்ளியில் சர்வதேச தாய்மொழி நாள் விழா

சாத்தான்குளம் அரசு பள்ளியில் சர்வதேச தாய்மொழி நாள் விழா

by mohan

இராமநாதபுரம் அருகே சாத்தான்குளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சாம்ராஜ் வரவேற்றார். தமிழ் மொழியின் சிறப்புகள், தாய்மொழியின் அவசியம் குறித்து ஆசிரியர் ஜெரோம் பேசினார்.

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாத்திடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக பள்ளி அளவில் மாணவர்கள் அனைவருக்கும் ஓவியம், கட்டுரை, பாட்டு, வாசிப்பு, எழுத்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற 29 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாணவிகள் தமிழ் மொழி பெருமை பறைசாற்றும் பாடல்களை ஆறாம் வகுப்பு மாணவியர் பாடினர், 8 வகுப்பு மாணவர் கமலக்கண்ணன் தமிழே ஓடிவா…. ஆடிவா என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். 9 வகுப்பு மாணவி சபர்மதி, மாணவர் நந்தகுமார் தமிழின் பெருமை, சிறப்புகள் குறித்து உரையாற்றினார். பள்ளி தமிழ் இலக்கிய மன்ற சாந்தி பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. மாதம் ஒரு மொழி அழிந்து கொண்டுவருகிறது என் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அழிந்துவரும் மொழிகளை பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தியது. சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்… மேலும் தமிழ்மொழியானது தமிழ் இலக்கிய வரலாற்று பெருமை கொண்டது. தமிழ் எந்த மொழியின் கலப்பு அற்ற மொழி, தனித்தன்மை வாய்ந்தது, ஆகையால் தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமிழ் மொழியை அரசு பள்ளிகளில் மாணவர்களாகிய நீங்கள் தான் பாதுகாத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழ்மொழி பெருமையை அரசு பள்ளி மாணவர்கள் தான் உங்களது சிறப்பான தமிழ் படைப்புகள் மூலம் தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்று பேசினர்.

தமிழ் ஆசிரியர் கதிர்மணி தொகுத்து வழங்கினார். சுவாமி தாஸ் நன்றி கூறினார். “தாய்மொழியாம் தமிழ் நாள்” குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். மாணவ, மாணவியர்கள் அனைவரும் சத்தான் குளம், முனியன் வலசை மற்றும் பள்ளி சார் பகுதி வாழ் மக்களியிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள் திருமூர்த்தி, புனிதா ராணி, ரேவதி, வத்சலா தேவி, சுமதி, கனிமுத்து மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர் சாந்தி, தலைமை ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!