இராமநாதபுரத்தில் சர்வோதயா பவுண்டேஷன் தொடக்க விழா

இராமநாதபுரத்தில் சர்வோதயா பவுண்டேஷன் தொடக்க விழா மற்றும் ஏசிஇ பவுண்டேஷன் முதலாம் ஆண்டு நிறுவன நாள் விழா நடந்தது. நெய்தல் வட்டார களஞ்சியப் பணியாளர் கே. பெத்தனாச்சி வரவேற்றார். ஏசிஇ பவுண்டேஷன் சாதனைகள் குறித்து அதன் தலைவர் பி.சிவராணி பேசினார்.சர்வோதயா பவுண்டேஷன்,களஞ்சிய சம்மேளன பணிகள் குறித்து கே.பாப்பா, ஜி.பழனிகுமார் பேசினர். சர்வோதயா பவுண்டேஷன் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து தலைமை செயல் அதிகாரி பி.ராஜன் பேசினார். சர்வோதயா கால்நடை பயிற்சி மையத்தை தூத்துக்குடி கனரா வங்கி உதவி பொது மேலாளர் எம்.காந்தி திறந்து வைத்து ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வங்கி சேவை குறித்து பேசினார். வங்கிகளுடன் சுய உதவிக்குழுக்களின் இணைப்பு குறித்து தமிழ்நாடு கிராம வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் எஸ் சோமசுந்தரம் பேசினார்.

நாகநாதன் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சீனிவாசன், அரசு டாக்டர் ஜெ.பெரியார் லெனின் ஆகியோர் பேசினர். எஸ்.பான்குமரன் வாழ்த்துரை பேசினார். தேசிய பசுமை படை செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.பெர்னாடிட், பா.தீனதயாளன் ஆகியோர் பேசினர். ஏழைகள் மற்றும் வன்கொடுமைகளுக்கான இலவச சட்ட உதவிகள் குறித்து சார்பு நீதிபதி எம்.பிரீத்தா பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சீனிவாசன் பேசினார். அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் காப்பீடு ஏழைகளுக்கான வெகுமதி என்பது குறித்து ராமநாதபுரம் கனரா வங்கி தலைமை மேலாளர் பி.சந்திர சேகர் பேசினார். மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு குறித்து அரசு மனநல மருத்துவர் ஜெ.பெரியார் லெனின் பேசினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சட்டப் போராட்ட அனுபவங்கள் குறித்து தென்காசி வழக்கறிஞர் ஏ.ஆர். ஷிவகுமார் பேசினார். ஏழை பெண்கள் சுய உதவிகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்து மதுரை இந்திய ஆயுள் காப்பீடு கிளை மேலாளர் ஏ.ஜமால், நுண் காப்பீடு திட்டம் குறித்து ஆர்.ராஜமோகன் ஆகியோர் பேசினர். தேசிய காப்பீடு திட்ட பயன்கள் குறித்து கோட்ட மேலாளர் வி.ரெஜினா, கிளை மேலாளர் வி.சதீஷ்குமார் ஆகியோர் பேசினர். புதுகை வட்டார மீனவர் களஞ்சியப் பணியாளர் ஆர்.வாசுகி நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..