ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் ( பொதுப் போட்டி , பெண், ஆதரவற்ற விதவை ) பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள் என 74 பேர் கலந்து கொண்டனர்.ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜா தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) அ. சிவசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சங்கர், மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.நாகராஜ், கண்ணன், ஜி. தீனதயாளக்குமார்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு)
ச. காமேஸ்வரி ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தினர். மாற்றுச் சான்றிதழ். சாதிச்சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, சிறப்புத் தகுதிக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. தகுதியுடைவரின் பெயர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) மா.பிரதீப் குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..