நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கருத்தரங்கம்.

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் விதத்தில் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறையின் சார்பில்”ராக்கெட் அறிவியல்”என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்  கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.மாநிலத்தின் பல்வேறு கல்லுரி மற்றும் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் நேரு நினைவு கல்லுரியில் மாணவர்கள் தயாரித்த PSLV, GSLV MKII, GSLV MKIII உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு மைய பொறியாளர் திரு எம்.பாலசண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நமது பெருமைமிகு இஸ்ரோ விஞ்ஞானி.மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் மாணவர்களைப் பற்றி கனவு திட்டங்களை பற்றியும், ராக்கெட் மற்றும் செயற்கைகோள் செயல்படும் விதம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

இந்திய விண்வெளித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் சிறப்புரையாற்றினார்.சந்திராயன் 1&2 செயல்பாடு குறித்து எடுத்து கூறினார்.மேலும் ககன்யான் திட்டத்தின் மூலம் நமது நாட்டினர் விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும் கூறினார். நேரு நினைவு கல்லுரி உதவி பேராசிரியர் இரமேஷ் பேசுகையில் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ உலகில் முதன்மையாக திகழ்வதாகவும் குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறினார்.முன்னதாக ,அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் பெ.முருகன் அவர்கள் கருத்தை துவங்கி வைத்து தலைமை உரையாற்றினார் . இயற்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் சு.பங்காரு வரவேற்பு உரையாற்றினார். இயற்பியல் துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் இரா பால சுப்ரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அறிமுகப்படுத்தினார். இயற்பியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் வ.வேலுசாமி நன்றியுரையாற்றினார்.

செய்தி : இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..