குண்டும் குழியுமான சாலைகள் : விபத்து நிகழும் அபாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் எண்டபுளி பஞ்சாயத்திற்கு உட்பட நேருநகர் பகுதியில் இருந்து முருகமலை நகர் பகுதி வரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை போடுவதற்க்கான பணி மேற்கொள்ளப்பட்டு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.வெறும் கற்களை மட்டும் போட்டுவிட்டு அவற்றின் மீது மண் போட்டு தற்காலிக சாலைகள் அமைத்துள்ளனர். பல மாதங்களாகியும், ஊரக உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி தார் சாலை போடாமல் அப்படியே பணியை பாதியில் நிறுத்தி விட்டுள்ளனர். போதிய நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் பணியை பாதியில் நிறுத்தியதன் காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.நேரு நகர் முதல்முருகமலைநகர் வரை போடப்படும் இச்சாலையால் பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவர். விவசாய, விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மோசமான இச்சாலையால் பெரிதும் பாதிப்படைகின்றனர், மேலும் முருகமலைநகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் E. புதுக்கோட்டை ,நேரு நகர், ஆரோக்கியமாதா நகர், கக்கன்ஜி நகர், ஜே.கே காலணி, கும்பக்கரை, செலும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மோசமான இச்சாலையால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, கரடு முரடான இச்சாலையால் வாகன ஓட்டிகள், பெண்கள், கர்பினித் தாய்மார்கள், பாதசாரிகள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் மிகுந்த பாதிப்பு ஆளாகி வருகின்றனர். கிடப்பில் போடப்பட்டுள்ள நேருநகர் முதல் முருகமலை வரையிலான சாலையை சீரமைத்து தார் சாலை உடனடியாக அமைத்து இப்பகுதி விவசாயிகளின் துயர் நீக்கி, அவர்களது வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவிட வேண்டுமாயினும், மாணவ, மாணவியர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், கர்பினித் தாய்மார்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்டப்புளி பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக இச்சாலையை சீரமைத்து, தார்ச்சாலையாக மாற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமாயின் சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

இவண்.. சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..