Home செய்திகள் சயனட் குப்பிக்கு மேல் தேனை தடவி கொடுப்பது போல உள்ளது தமிழக முதல்வர் அறிவிப்பு: சலுகை அறிவித்து உள்ளதை திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தல்..

சயனட் குப்பிக்கு மேல் தேனை தடவி கொடுப்பது போல உள்ளது தமிழக முதல்வர் அறிவிப்பு: சலுகை அறிவித்து உள்ளதை திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தல்..

by Askar

சயனட் குப்பிக்கு மேல் தேனை தடவி கொடுப்பது போல தமிழக முதல்வர் முஸ்லீம்களுக்கு சலுகை அறிவித்து உள்ளதை திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்..

சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மசூதி பராமரிப்பு செலவுகள் என 60 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்து உள்ளார் இந்த பணம் எந்தெந்த மசூதிகளுக்கு கொடுக்கப்படுகிறது என தெளிவுபடுத்த வேண்டும் ..

இதுவரை எந்த ஒரு மசூதிக்கும் தமிழக அரசு பராமரிப்பு பணம் கொடுக்க வில்லை அதே நேரத்தில் வருமானம் வரும் மசூதிகளில் இருந்து பள்ளிவாசல்  பராமரிப்பு போக 10 முதல் 20 % சதவீத தொகையை வஃக்பு போர்ட் (தமிழக அரசு) வசூலித்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

மசூதிகளுக்கு பராமரிப்பு செலவு கொடுக்காமல் பராமரிப்புக்கு நீதி ஒதுக்கீடு என சொல்வதே முஸ்லீம்களை ஏமாற்றும்  நவீன காலத்து கோயபால்ஸ் ..

அதே போன்று இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் முஸ்லீம் உலமாக்களுக்கு ஓய்வூதியமாக ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைப்பதாகவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் …

இது எப்படி உள்ளது என்றால் சயனட் குப்பிக்கு மேல் தேனை தடவி கொடுப்பது போல மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த (CAA) மசோதாவுக்கு ஆதரித்து ஓட்டு அளித்து விட்டு வீதிக்கு வந்து போராடாத உலாமக்களை வீதிக்கு வரவழைத்து விட்டு முஸ்லீம்களுக்கு சலுகை எதற்காக?

ஆகையால் சமீபத்தில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கு அறிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

அன்புடன் தடா ஜெ அப்துல் ரஹிம் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!