Home செய்திகள்உலக செய்திகள் உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) இன்று (பிப்ரவரி 20)

உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) இன்று (பிப்ரவரி 20)

by mohan

உலக சமூகநீதி தினமானது ‘கண்ணியமான வேலையினூடாக முரண்பாடுகளை தடுத்தலும் நிலைத்திரு அமைதியினை ஏற்படுத்தலும்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுறது. சமூகநீதி என்பது நாட்டுக்குள்ளும் மற்றும் நாடுகளுக்கிடையிலுமான அமைதியானதும், சகவாழ்வுக்குமான அடிப்படைக் கொள்கையாக அமைகின்றது. பால்நிலை சமத்துவம் அல்லது பிரத்தியேக மக்களது அல்லது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளினை ஊக்குவிக்கும் போது சமூகநீதிக்கான நியமங்களினைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். நாம் சமூகநீதியினை முன்னெடுக்க இவ்வாறான மக்கள் முகம் கொடுக்கும் பால்நிலை, வயது, சாதி, இனம், சமயம், கலாச்சாரம் அல்லது இயலாமை போன்ற தடைகளினை நீக்க வேண்டும்.

சமூக நீதி என்பது சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளைப் பெற்று அவன் மாண்புடன் வாழ வழி அமைத்தல் ஆகும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூக நீதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு முதன்மையான கடமைகளில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.பல நூற்றாண்டுகளாக நமது மக்களில் பெரும்பான்மையினருக்கு வாய்ப்புகளும், பயன்களும் மறுக்கப்பட்டுள்ளன.

இந்த அநீதியை அகற்ற நாம் தீர்மானித்தால், நாம் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நலிவடைந்த பிரிவினருக்கு மானியங்கள் வழங்கிட வேண்டும்.இதை ஒரே நாளில் செய்திட முடியாது. சமூக பொருளாதார ரீதியில் அரசு சிறப்பு சலுகைகள் வழங்கி அவர்களும் முன்னேறுவதற்கு ஆதரவு காட்டவேண்டும்.இங்குதான் வருகிறது இட ஒதுக்கீடு. நலிவடைந்த பிரிவினருக்கு நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடுகள் ஒரு சலுகை அல்ல அவை அரசியலமைப்பு சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள அவர்களது உரிமைகளாகும்.

சமூகநீதியினை அடைவதற்காக அபிவிருத்தி மற்றும் மனித கௌரவத்தினை ஊக்குவித்தல் ஐக்கியநாடுகள் அமையத்தின் முக்கிய உலகளாவிய பணியாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் (International Labour Organization) மேற்கொள்ளப்பட்ட சமூகநீதிக்கான உலகமயமாதல் நியாய பிரகடனமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினது சமூகநீதியினை நிலைநாட்டுவதற்கான அர்பணிப்புக்கான ஒரு அண்மைக்கால உதாரணமாகும். இந்தப் பிரகடனமானது நான்கு மூலோபாய நோக்கங்களை இலக்காக கொண்டுள்ளது.அனைத்து வேலைவாய்ப்புக்களிலும் நியாயமான விளைவுகளுக்கு உத்தரவாதமளித்தல், சமூகப்பாதுகாப்பு சமூக உரையாடல்அடிப்படை கொள்கைகள் மற்றும் வேலைசெய்யுமிடத்திலான உரிமைகள்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியினை உலக சமூகநீதி நாளாக பிரகடனப்படுத்தியதோடு குறித்த இந்த நாளினை சமூக மேம்பாட்டுக்கான உச்சிமாநாடு மற்றும் பொதுச்சபையின் 24 வது அமர்வின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப தேசிய ரீதியிலான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. சர்வதேச சமூகநீதிக்கான நாளினை கடைப்பிடிக்கும் போது சர்வதேச சமூகமானது வறுமை ஒழிப்பு, முழு நேர வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியமான வேலை, பால்நிலை சமத்துவம் சமூக நலன்களை அணுகுவதற்கான வசதி மற்றும் அனைவருக்குமான நீதி போன்ற விடயங்களை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளினை முன்னெடுக்க வேண்டும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!