Home செய்திகள் விவசாய நிலத்தில் திடீரென பரவிய தீ விபத்தால் மக்காச் சோளப்பயிர்கள் எரிந்து நாசம்-உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

விவசாய நிலத்தில் திடீரென பரவிய தீ விபத்தால் மக்காச் சோளப்பயிர்கள் எரிந்து நாசம்-உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

by Askar

விவசாய நிலத்தில் திடீரென பரவிய தீ விபத்தால் மக்காச் சோளப்பயிர்கள் எரிந்து நாசம்-உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

சிவகாசி தாலுகா மாறனேரி வருவாய் கிராமத்தில் உள்ள விவசாயி திருவேங்கட ராமானுஜம் என்பவரின் 36 ஏக்கர் நிலத்தில் மக்காச் சோளப் பயிர் திடீரென பரவிய தீயால் எரிந்து நாசமானது.இது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலத்தின் அருகில் உள்ள காரனேசன் பயர் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் வெடி கழிவு பொருட்கள் கொளுத்தப்படும் இடத்திலிருந்து தீ பரவியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி கூறுகையில், ஒரு விவசாயி கஷ்டப்பட்டு மகசூல் செய்ய நிலத்தில் சீர்திருத்தி மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். முப்பத்தாறு ஏக்கரில் சிவகாசி கார்னேசன் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் கழிவுப் பொருட்கள் 19/2/20 மாலை நான்கு மணிக்கு தீ வைத்து கழிவுகளை ரோட்டு ஓரத்தில் கொளுத்தப்பட்டுள்ளது.

அந்தத் தீ காற்றின் வேகத்தால் தரிசு நிலங்களுக்கு பரவி அருகிலுள்ள திருவேங்கட ராமானுஜம் என்ற விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட 36 ஏக்கர் மக்காச் சோளத்தையும் அழித்துவிட்டது. இந்த தீ ஃபயர் வொர்க்ஸ் அருகில் இருந்து தான் பரவி உள்ளது என்பதற்கு சரியான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது. பயர் ஒர்க்ஸ் இன் கழிவுப் பொருட்களும் உள்ளது.

விவசாயின் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது சிவகாசி கோட்டாட்சியர் அவர்களும், தாசில்தார் அவர்களும் உடனடியாக இந்த இடத்தை பார்வையிட்டு பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களின் அருகே பயர் ஒர்க்ஸ் கழிவுகளால் விவசாயம் நஷ்டம் ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே கார்னேசன் ஃபயர் வொர்க் நிறுவனம் விவசாய நிலங்களுக்கு அருகில் செயல்பட தடை விதிக்க வேண்டும். மேலும் விவசாயி திருவேங்கட ராமானுஜம் அவர்களுக்கு முப்பத்தாறு ஏக்கருக்கு தீயினால் நஷ்டமடைந்த மக்காச்சோள பயிருக்கு நஷ்ட ஈடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!