Home செய்திகள் மாணவர்களுக்கு பள்ளியில் வைத்தே பேப்பர்,பேனா இல்லாமல் ஜீரோ டெபாசிட் தொகையில் வங்கி கணக்கு துவக்கியது எப்படி ?

மாணவர்களுக்கு பள்ளியில் வைத்தே பேப்பர்,பேனா இல்லாமல் ஜீரோ டெபாசிட் தொகையில் வங்கி கணக்கு துவக்கியது எப்படி ?

by mohan

காகிதமற்ற உடனடி வங்கி கணக்கு துவக்கும் முறைகள்.எங்கள் பள்ளிக்கும் இது போன்று நேரில் வந்து கணக்கு துவக்கி தருவார்களா ? பல ஆசிரிய நண்பர்களின் கேள்வி இதுதான் .உறுதியாக பள்ளிக்கே வந்து ஜீரோ டெபாசிட் தொகையில் அஞ்சல் அலுவலர்கள் கணக்கு துவக்கி தருவார்கள் .

திட்டத்தின் பெயர் : இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் IPPB (INDIA POST PAYMENT BANK)

இந்த யோசனை எப்படி வந்தது ? தங்கள் பள்ளியில் இதனை செயல்படுத்திய சுவாரசியமான நிகழ்வை தொடர்ந்து சொல்கிறார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

எங்களது வட்டார கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவிகளின் கல்வி உதவித் தொகையை வங்கி மூலமாக நேரடியாக ஏற்றும் வகையில் வங்கி கணக்கு எண் IFSC கோடு வேண்டும் என்று கேட்டார்கள். நாங்கள் கடந்த பல வருடங்களாக அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு துவக்கி அதன் மூலமாகவே அந்த பணத்தை செலுத்தி வருகிறோம் . இந்த நிலையில் நேரடியாக பணம் செலுத்த வேண்டுமென்றால் வங்கிகளில் சென்று கணக்கு ஆரம்பிக்க பல்வேறு ஆவணங்கள் வழங்கி பெற்றோர்களையும் இரண்டு மூன்று நாட்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பவர்களே .

திருப்பத்தை ஏற்படுத்திய அஞ்சலக கோட்ட கண்கணிப்பாளர் :

அவர்களது சிரமத்தை கருத்தில் கொண்டு அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு கணக்கைநெப்ட் கணக்காக மாற்றுவதற்கு ஏதேனும் வழி உள்ளதா என்று காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களை தொடர்பு கொண்டேன் .அவர்கள் முன்பு எங்கள் பள்ளிக்கு ஆதார் எடுப்பதற்காக அஞ்சலகத்தில் இருந்து அலுவலர்களை அனுப்பி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் எடுக்க மிகப்பெரிய உதவிகரமாக இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ,அவர்கள் அஞ்சலக வங்கி உள்ளது என்றும் , அந்த வங்கி கணக்கு ( IFSC,MICR கோடு உள்ளது ) மூலமாக மாணவர்களுக்கு அஞ்சலக வங்கியிலேயே நேரடியாக பணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்கள் .அஞ்சலக வங்கிக் கணக்கு இரண்டு நிமிடத்தில் துவக்கலாம் என்றும் கூறினார்கள் .மாணவிகளின் பெயரிலேயே கணக்கு துவக்கலாம் என்று கூறினார்கள். பேப்பர் பேனா எதுவும் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் வைத்தே கணக்கு துவக்கலாம் என்று கூறி உடனடியாக 20 நிமிடங்களில் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அலுவலர்களை எங்கள் பள்ளிக்கு அனுப்பி அனைத்து மாணவிகளுக்கும் இரண்டு மணிநேரத்திற்குள் அஞ்சல் வங்கி கணக்கை துவக்கி உதவி செய்தார்கள். தேவகோட்டை அஞ்சலக அலுவலர் கௌதம் என்பவரும் , இருளாண்டி என்பவரும் எங்களுக்கு இந்த நிகழ்வில் மிகப் பெரும் உதவியாக இருந்தார்கள்.

கூலி வேலை பார்க்கும் பெற்றோர்களுக்கு நல்ல உதவிகரமான திட்டம் :

சில மாணவிகளின் ஆதார் எண் அப்டேட் ஆகாமல் இருந்ததால் அவளுடைய பெற்றோரையும் வரச் சொல்லி, அவர்கள் அனைவரும் கூலி வேலை பார்ப்பவர்கள் ஆதலால் வேலைக்கு சென்றவர்களை வேலை முடிந்த பிறகு மாலை ஐந்து மணிக்கு மேல் வரச்சொல்லி அவர்களுக்கும் அவர்களது பெயரில் அவர்களது குழந்தைகளுக்கு கணக்கு அட்டை துவக்கி கொடுத்தோம். பேப்பர், பேனா இல்லாமல் இரண்டு நிமிடங்களில் கணக்கு துவக்கி கொடுத்து நிகழ்வு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாலை ஆறரை மணிவரை அஞ்சலக ஊழியர்கள் எங்களுடன் இருந்து எங்களுடைய பள்ளி ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு அனைத்து மாணவிகளுக்கும் கணக்கை துவக்கி வைத்து அப்போதே கணக்கு அட்டையும் வழங்கினார்கள். இதன் மூலமாக மாணவிகளின் ஊக்கத் தொகை நேரடியாக அஞ்சலக வங்கி கணக்கில் சேரும் என்பது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .அதிரடியாக இந்த நிகழ்வை எங்களுக்கு செய்து கொடுத்த கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் உங்கள் வீட்டின் அருகிலேயே இந்தக் கணக்கைத் துவக்கி கொள்ளலாம் .இந்த கணக்கு மாணவிகளுக்கு துவக்கும் போது இருப்புத் தொகை இல்லாமல் துவக்கலாம். அதாவது ஜீரோ இருப்புத் தொகையில் டெபாசிட்டில் இந்த கணக்கை நாம் துவக்க இயலும். இது மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்தத் திட்டம் குறித்து பல நண்பர்கள் என்னிடம் கருத்துக் கேட்டார்கள் .உங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் மிக எளிமையாக உங்கள் பள்ளிக்கு அஞ்சலக அலுவலர் வந்து ஜீரோ டெபாசிட் தொகையில் கணக்கு துவக்கி கொடுப்பார்கள் என்பது மிக முக்கியமான விஷயமாகும். உங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் நீங்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் உதவி செய்வார்கள் .அதுபோக மேலும் தகவல்களுக்கு காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்கணிப்பாளர் திரு சுவாமிநாதன் அவர்களின் மொபைல் எண் 9626978728 . காரைக்குடி இந்தியா போஸ்டல் பேமெண்ட் வங்கி அதிகாரி நாகு கார்த்திக் அவர்களது மொபைல் எண் 9176682552

அன்புடன்

லெ . சொக்கலிங்கம்

தலைமை ஆசிரியர்

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம்

திட்டம் குறித்து மேலும் விரிவாக அறிய :

இந்தத் திட்டம் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்:. 1) ஜீரோ பேலன்ஸ்ல் கணக்கு துவக்கலாம் 2) ஆண்டிற்கு 4% வட்டி 3) 5 நிமிடங்களில் கணக்கு ஓபன் செய்து விடலாம் 4) காகிதமற்ற உடனடி கணக்கு 5) பணப் பரிமாற்றம் (NEFT /RTGS /IMPS ) செய்து கொள்ளலாம் 6) இந்தியாவில் எங்கிருந்தும் கைரேகை மட்டும் வைத்து அக்கவுண்ட்டை ஆப்ரேட் செய்யலாம் 7) ஏடிஎம் கார்டு /டெபிட் கார்டு தேவையில்லை பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை 8) மொபைல் அப்ளிகேஷன் வசதி உள்ளது 9) உங்கள் வங்கி உங்கள் வாசலில் 10) மின்/ தொலைபேசி, டிடிஎச்/மொபைல் ரீசார்ஜ், பில் பேமென்ட் வசதி உள்ளது 11) அனைத்து தொழில்களுக்கும் நடப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம் 12) அஞ்சலக திட்டங்களுக்கு SSA,RD,PPF,POSA ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் 13) ஸ்டூடண்ட் ஸ்காலர்ஷிப் பணத்தை IPPB அக்கவுண்ட் மூலம் வரவு வைத்து கொள்ளலாம். 14) மற்ற வங்கிகளிலிருந்து பணம் அனுப்பவும் பெறவும் இயலும். 15) அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிப்பில் வைத்துக் கொள்ளலாம்

16) அனைத்து விதமான சப்சிடீஸ், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கேஸ் சப்சிடீஸ், உட்பட அனைத்தும் ஐபிபிபி அக்கவுண்ட் வழியாக பெறலாம்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!