நேரு நினைவு கல்லுரியில் தீ விபத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரின் ரோட்ராக்ட் கிளப் & தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, துறையூர் இணைந்து தீ விபத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேரு நினைவு கல்லுரி மூக்கபிள்ளை கலையரங்கில்  நடைபெற்றது.சிறப்பு விருத்தினராக பங்கேற்ற தமிழ்நாடு தீயணைப்பு & பாதுகாப்பு துறை அறிவழகன், துறையூர் நிலைய அதிகாரி மற்றும் பாலசந்தர் TNFRS தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.அதில் முதலுதவி மற்றும் தீவிபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசர காலங்களில் நம்மை எப்படி மீட்பது, பாதுகாப்பு செய்வது குறித்த ஒத்திகை நிகழ்த்தி நடத்தி காட்டினர்.

முன்னதாக வேதியல் துறை பேராசிரியர் மற்றும் ரோட்ராக்ட் கிளப் அமைப்பு செயலாளர் முனைவர் M.இரமேஷ் அவர்கள் வரவேற்பு வழங்கினார்.இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் A.R.பொன்பெரியசாமி  தலைமை உரையை நிகழ்த்தினார்.கல்லூரி குழுத்தலைவர்பொன்பாலசுப்ரமணிய மற்றும் செயலர்  பொன்ரவிச்சந்திரன் வாழ்த்துறை வழங்கினார்கள்.இவ்விழாவில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத ஊழியர்களும் கலந்து கொண்டனர்.பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இவ்விழாவின் இறுதியில் ரோட்ராக்ட் கிளப் செயலர் மூன்றாம் ஆண்டு வேதியல் துறை மாணவி P.காயத்ரி நன்றியுறை கூறினார்.

செய்தி: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..