கனவில் வந்த “ட்ரம்ப்” சிலை வைத்து பூஜைகள் செய்யும் இளைஞர்…

தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபடுகிறார் இளைஞர் ஒருவர்.

மனதுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துவது நம் நாட்டு கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் தன் மனதிற்கு பிடித்த தலைவரான அமெரிக்க அதிபருக்கு தன் வீட்டிலேயே சிலை வைத்து தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா எனும் இளைஞர்.

அதற்கு அவர் சொல்லும் காரணமும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது,நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாவின் கனவில் ஒருநாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்துள்ளார் அன்று முதல் அவரின் படத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

அதோடு நிறுத்தாமல் தனது வீட்டிலேயே ட்ரம்புக்கு ஒரு சிலை வைத்த கையோடு, தினமும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடத்தி வருகிறார். மேலும் தான் ட்ரம்பின் மீது வைத்துள்ள அன்பு காலப்போக்கில் பக்தியாக மாறியதாகவும் அதனாலேயே தான் சிலை வைத்ததாகவும் தெரிவிக்கிறார் அந்த இளைஞர்.

சிலை கட்டியதால் தனது குடும்பத்திலும் குழப்பங்கள் வருவதாகவும் அதனால் நிறைய பிரச்சனைகளை தான் சந்திப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் தான் ட்ரம்பின் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இதை செய்ததாகவும் கிருஷ்ணா கூறுகிறார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ட்ரம்ப் இந்தியா வரும்வேளையில் கிருஷ்ணா கட்டியுள்ள சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..