சித்தர்கோவில் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம் ஆக்கிரமிப்பு வீடுகள்_அகற்றம்-மாற்று இடங்களை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

சித்தர்கோவில் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம் ஆக்கிரமிப்பு வீடுகள்_அகற்றம்- மாற்று இடங்களை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

சேலம் அருகே உள்ள சித்தர்கோவில் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரம், சித்தர் கோயில் பிரிவிலிருந்து கே.கே.நகர் வழியாக செல் லும் சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக, மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நடைபெற்று வந்தன. இதனை அடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் சித்தர் கோயில் பிரிவிலிருந்து கே.கே.நகர் வழியாக மாட்டையாம்பட்டிக்கு செல் லும் சாலையின் இருபுறமும் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடை களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். அதேநேரம் இப்பகுதியில் குடியி ருப்போர் மாற்று இடங்களை அரசு வழங்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..