குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே டி பிளாக் பகுதியில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை   முற்றுகையிட முயன்ற பல்வேறு அமைப்பினரை, அரசு ஐடிஐ அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அங்கு திரண்டிருந்தவர் கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர்அகமது இப்ராஹிம்,தமுமுக மாநிலச் செயலர் சாதிக்பாட்சா, மாவட்ட தலைவர் முகமது இக்பால், எஸ்டிபிஐ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம், நகர் தலைவர் அப்துல் ஜமீல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்எஸ்ஏ ஷாஜகான், நகர் தலைவர் சிராஜூதீன்,ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுச்செயலர் ஆலம், நாம் தமிழர் கட்சி உறுப்பினர் பிலால், அமமுக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலர் அகமது இப்ராஹிம், மதிமுக செயற்குழு உறுப்பினர்சாதிக் அலி, திமுக நகர் செயலர் கார்மேகம், தேவிபட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர்
ஜாஹீர் உசேன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் முருகபூபதி பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் முகமது யாசின்,மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகி வெங்கடேசன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலர் தமிழ் முருகன் உள்ளிட்டோர் பேசினர். மாவட் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..